ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் …
Read More »பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம்
இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டு உள்ளது இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்தார் ஹரி ஆனந்த சங்கரி
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் உ.ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் காணாமல்போனோர்கள் நடத்திவரும் போராட்ட கொட்டகைக்கு நேற்றுக் காலை சென்ற அவர் அங்கு காணமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ‘முந்நூறு நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற் போனவர்களின் விடயத்தில் இங்குள்ள அரசியல்தலைவர்களையோ அரச …
Read More »இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!
சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார். சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு …
Read More »இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க சிறுவர்களின் கட்டாய கல்வியை தடுத்தல் தொடர்பாக 1298 முறைப்பாடுகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 481 முறைப்பாடுகளும், தீவிர பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 284 முறைப்பாடுகளும், 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மீதான வன்புணர்வு தொடர்பாக 322 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்டளை சட்டத்தின் …
Read More »மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது!
எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். மாலைதீவின் கடல் எல்லைக்கு உட்பட்ட வாவு அட்டோல் பகுதியில் இவ்விரண்டு படகுகளும் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. இதை, மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோர ரோந்துப் படகு ஒன்று அவதானித்தது. இது பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறியத் தந்த பின்னரே இரண்டு படகுகளையும் கைப்பற்றியதுடன், அதில் …
Read More »இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக …
Read More »இலங்கையை இறுக்கிப்பிடிக்கத் தயாராகிறது ஐ.நா.!
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள …
Read More »இலங்கையில் கடித்த நாய்; பிரான்ஸில் உயிரிழந்த சிறுவன்!
இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான். கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான். திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நாடு திரும்பிய அவன், கடந்த …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உறவினர்களைத் தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினமும் தாயொருவர் மரணடைந்துள்ளார். கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் …
Read More »