Monday , June 17 2024
Home / Tag Archives: இலங்கை (page 3)

Tag Archives: இலங்கை

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், …

Read More »

இலங்கையில் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இலங்கையின் பொலிஸ் துறையில் கடமையாற்றும் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் சில திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

இலங்கையில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய சேவை!

இலங்கையில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து …

Read More »

இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் …

Read More »

இலங்கையில் சிறந்த தலைமைத்துவம் இல்லை!

நாட்டில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த காலங்களைவிட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நிலவிய யுத்தத்தை எக்காலத்திலும் நிறைவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள். …

Read More »

இலங்கை சர்வதேச முதலீடுகளை இழக்கின்றது

கோத்தபாய ராஜபக்

உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே …

Read More »

மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும், மரண தண்டனை தொடர்பான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. எனவே …

Read More »

இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்

ரணில் விக்கிரமசிங்க

அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 184.3 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கொள்வனவு விலை 180.6 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More »

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா?

சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ …

Read More »