அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, தண்டையார்பேட்டை திமுக தேர்தல் பணிமனையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி பிளவுபட்டு விட்டதாகவும், இனிமேல் இவர்களால் தமிழக மக்களை ஆள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அடுத்த 6 மாதத்திற்கு ஆட்சி மாற்றம் நிகழும் என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதற்கு அச்சாரமாக இருக்கும் என்றும் துரைமுருகன் அப்போது குறிப்பிட்டார்.

