Saturday , November 16 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / டீச்சர் வராட்டி என்ன… நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகினி!

டீச்சர் வராட்டி என்ன… நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகினி!

சேலம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார். ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வந்தது.

இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் அந்த அமைப்பின் ஒரு பிரிவினர் தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றார் ஆட்சியர் ரோகிணி. பின்னர் அவர் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். சேலத்தின் முதல் பெண் ஆட்சியரான ரோகிணி மாற்று திறனாளிகளிடம் கனிவோடு நடந்து கொள்வது, திட்டங்களை அதிரடியாக செயல்படுத்துவது என்று மக்கள் மனதில் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …