ஆர்.கே. நகர் தொகுத்திக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஆர்.கே. தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
மேலும் 5 மாநில் பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆளும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சசிகலா ஆதரவு வேட்பாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, உள்ளிட்டோரும் போட்டியிட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.