Monday , October 13 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நெல்லையில் மழை – பாபநாசம், அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

நெல்லையில் மழை – பாபநாசம், அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம், அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று நள்ளிரவில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அம்பை, ஆய்க்குடி, சேரன்மகாதேவி, பாளை, செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அம்பையில் 22.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

143 அடி கொண்ட பாபநாசம் அணையில் நேற்றைய நிலவரப்படி 22.65 அடி நீர்மட்டம் இருந்தது. தொடர் மழை காரணமாக இன்று காலை 23.3 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 121.27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 54.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

132.22 அடி கொண்ட அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 43 அடியாக உள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 19.68 அடி நீர்மட்டம் உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 81.1 அடியாக நீர்மட்டம் உள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …