அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை,” என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங்கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம்.
அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மான மாக கொண்டு வந்துள்ளனர். பாதிவந்துள்ளனர்;
மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்.
எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இதுவரை பேச்சு நடத்த, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை.
இரு அணிகளும் இணைந்தால், அது, தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படி அமையும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.