Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்

கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்

கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்

தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரானார்.

நேற்று முன்தினம் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான உடனேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார்.

உடனடியாக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்கவும் அவர் உரிமை கோரினார். ஆனால் கவர்னரிடமிருந்து அழைப்பு எதுவும் வராத நிலையில், 2-வது முறையாக நேற்றும் எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்து நினைவூட்டல் கடிதம் கொடுத்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும்பான்மையான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தையும் கொடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார்.

அதன் பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் உத்தரவிடுவார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருவார்.

அப்போது அ.தி.மு.க. கொறடாவான ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று உத்தரவிடுவார்.

இந்த உத்தரவை மீறி ஓட்டு போட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்.

முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர் மாபா. பாண்டியராஜன் (ஆவடி), எஸ்.பி.சண்முக நாதன் (ஸ்ரீவைகுண்டம்), மாணிக்கம் (சோழவந்தான்), வி.சி. ஆறுக்குட்டி (கவுண்டம் பாளையம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மனோகரன் (வாசுதேவநல்லூர்), சரவணன் (மதுரை மேற்கு), சின்னராஜ் (மேட்டுப்பாளை யம்), செம்மலை (மேட்டூர்) ஆகிய 9 எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துள்ளனர்.

பன்னீர்செல்வத்தோடு சேர்த்து 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தற்போது தனி அணியாக பிரிந்து நிற்கிறார்கள்.

சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பின்போது இவர்கள் அனைவரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்கிற முறையில், எடப்பாடி பழனிச்சாமிக்கே வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ். உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் அவர்களது பதவிக்கு ஆபத்து ஏற்படும்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …