பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூ ருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். அதன்பிறகு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சசிகலா, இளவரசியை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. கர்நாடக சிறைத்துறை விதிமுறை களை மீறி, இத்தகைய சந்திப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனால் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்தியநாரயண ராவ், சசிகலா தரப்பை சந்திக்க பார்வையாளர்களை அடிக்கடி அனுமதிக்கக் கூடாது என சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே தமிழக முதல்வ ராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்திக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறைக்கு நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
டிஐஜி-யின் கெடுபிடி காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறை முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் கோரிக்கையை நிராகரித்தார். இதேபோல முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் நாள் முழுவதும் காத்திருந்தும் சசிகலாவை சந்திக்க முடியாமல் திரும்பினர்.
வாரம் 2 முறை மட்டுமே
இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘சிறைத்துறை விதிமுறைகளின் படி சசிகலாவை சந்திக்க வாரத்துக்கு 2 முறை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியும். அதுவும் முறையான ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேச அனுமதிக்கப்படும். அதே வேளையில் சிறைக்கு முதல்வரோ, அமைச்சர்களோ வருவதாக இருந்தால், சிறைத்துறை மேலிடம் மட்டுமல்லாமல் மாநில உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இத்தகைய நடைமுறை பின்பற்றப் படுகிறது. சசிகலாவை சந்திக்க அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படும். கட்சியினரோ, பிற பொதுமக்களோ வாய்ப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்றனர்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரி களின் இந்த கெடுபிடியால் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள் ளனர். இதன்மூலம் சசிகலாவுக்கு வெளியில் இருந்து அனுப்பப்படும் பழங்கள், பிரட், பிஸ்கட், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட பொருட்களும் தடைபட்டுள்ளன. எனவே, சசிகலா தரப்பினர் சிறை உணவை மட்டுமே உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள குடும் பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.