தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் அளித்த பேட்டி:
முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்ததிலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழலில், தேவைப்பட்டால், அரசுக்கு எதிராக, சட்டசபையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.