கடவுளை தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது என அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடவுளைத் தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும், உண்மைக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றார். தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம் நடைபெறுகிறது. மக்களை காப்பற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு 19 எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் தங்கி உள்ளனர்.
தமிழகம் மட்டுமல்ல இந்திய துணைக் கண்டமே தமிழக அரசியல் சூழ்நிலையை கவனித்து வருகிறது. கட்சியை காப்பாற்ற போராடும் 19 எம்எல்ஏ-க்களிடம் நிச்சயம் பணம் பாயாது. என்னோடு நிற்பவர்கள் தான் உண்மையில் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்.
கட்சியை பொதுச் செயலாளர் தான் வழிநடத்த முடியும் என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்துவதற்காக அவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். யாருக்கும் பயப்பட்டு அல்ல. அவர்களின் நியாயம் வெற்றி பெறும். அதற்காக ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
https://www.youtube.com/watch?v=s6TlUZ8k96c