Thursday , October 16 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நீட்டுக்கு நிரந்தரமாக வேட்டு… ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

நீட்டுக்கு நிரந்தரமாக வேட்டு… ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை : நீர் தேர்விற்கு நிரந்தரமாக தடை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆவடியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சயினிர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாணவர் பாசறை சார்பில் நெடும்பயண போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஆவடியில் நீட் தேர்விற்கு நிரந்தர தடை கேட்டு நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வந்து ரயில் நிலையத்திற்குள் சென்று ரயிலை மறித்துப் போராட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட முயன்ற 63 பேரையும் கைது செய்தனர்.

https://www.youtube.com/watch?v=_WGMN6qWPwA

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …