Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்

எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் நேற்று சந்தித்தார். அப்போது கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.

இந்த எம்.எல்.ஏக்களும் தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித் தனியே ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தினகரன் அணியில் அதிகாரப்பூர்வமாக 21 எம்.எல்.ஏக்கள் இருப்பது உறுதியானது.

https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …