Thursday , August 21 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!

ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றதால், அதனை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றுவருவதாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஆர்.கே. நகர் பாஜக வேட்பாளரும் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …