ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் என்றார்.
தெரிந்தோ தெரியாமலோ சட்டமன்ற உறுப்பினராக சினிமா துறை சார்ந்த தான் இருந்தும், ஜிஎஸ்டி பிரச்சனை, திருட்டு விசிடி பிரச்சனை என அரசை வலியுறுத்தும் போது தன்னை அழைத்து செல்லாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.
எனவே வரும் காலங்களில் சினிமா துறைக்கு பிரச்சனை வரும் போது தன்னை மட்டுமல்ல, திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என தெரிவித்தார்