Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

புதிய கட்சி துவங்குவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக உலகநாயகன் கமல் ஹாசன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ஆங்கில இதழுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து அளித்துள்ள பேட்டியில், எனக்கும் அரசியல் சிந்தனை உள்ளது எனது சிந்தனையுடன் எந்த அரசியல் கட்சியும் ஒத்து போகவில்லை.

நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எனக்கு இல்லை.

அரசியலில் புதிய மாற்றங்கள் தேவை, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஒருவர் சிறப்பாக பணியாற்றவில்லை என்றால் அவரை உடனடியாக மாற்றும் நிலை உருவாக வேண்டும்.

இந்த மாற்றத்தினை கொண்டுவர சிறிது தாமதமானாலும் மாற்றம் தமிழகத்திலிருந்து துவங்க நான் விரும்புகிறேன்.

தனிகட்சி துவங்கும் எண்ணம் எனக்கு இல்லை கட்டாயத்தின் பெயரிலேயே அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

பக்கத்து வீடு சுத்தமாக இருக்கும் முன் முதலில் என் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் இதுதான் என்னுடைய எண்ணம் .சரியான நேரம் அமைந்தால் மாற்றமும் அதற்கான வேலைகளும் துவங்கும். ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன் நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …