சென்னை: சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள் தொடர்பாக கமல்ஹாசன் விமரசனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-
மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழிர்களுக்கு மட்டும் தானா? வேலை செய்யாவிடில் ஊதியம் கிடையாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?
என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
The honourable court warns teachers on strike. I beseech the court to issue similar warnings to those MLAs who desist from attending work
— Kamal Haasan (@ikamalhaasan) September 15, 2017
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
— Kamal Haasan (@ikamalhaasan) September 15, 2017