Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கமல்ஹாசன் கட்சியின் பெயர் ‘டுவிட்டர் முன்னேற்ற கழகமா? எச்.ராஜா

கமல்ஹாசன் கட்சியின் பெயர் ‘டுவிட்டர் முன்னேற்ற கழகமா? எச்.ராஜா

கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறி வருகிறார். நவம்பர் 7ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் வெறும் செயலி ஒன்றை மட்டும் ஆரம்பித்தார். அந்த செயலியும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பது போல் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றே அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

அதை நிரூபிப்பது போல் ரசிகர்கள் அனுப்பிய பணத்தையும் அவர் திருப்பி அனுப்பி வருகிறார். இருப்பினும் அவரது டுவிட்டர் அரசியல் மட்டும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஒருவேளை கட்சி ஆரம்பித்தால் அதற்கு ‘டுவிட்டர் முன்னேற்ற கழகம்’ என்ற பெயர் வைக்கலாம், அதுதான் அவரது கட்சிக்கு பொருத்தமான பெயராக இருக்கும்’ என்று கிண்டல் செய்துள்ளார்.

மேலும் கமலும், ஈ.வே.ராவும் ஒன்று என்றும் இருவரும் இந்துதுவாவிற்கு எதிராக பேசுபவர்கள் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …