கோவையில் நகைக்கடைகளில் 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை
கடந்த ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த காலகட்டத்தில் வங்கியில் வரைமுறையின்றி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் பட்டியலை வங்கிகள் வருமானத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து அதிக பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை பெரியகடை வீதி, கருப்ப கவுண்டர் வீதியில் நகைக்கடை, தங்க கட்டி வியாபாரம் செய்து வந்த விஜயகுமார், சுரேஷ் ஆகியோரின் நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைக்குள் நேற்று முன்தினம் வருமான வரித்துறையை சேர்ந்த 10 அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.
அவர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களை மூடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தங்க வர்த்தகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் இருப்பில் உள்ள தங்கம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து.
கடந்த ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த கால கட்டத்தில் விஜயகுமார், சுரேஷ் ஆகியோர் வங்கி கணக்குகளில் 500,1000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதணை நடத்தி இருப்பது தெரியவந்து.
இவர்கள் செய்யும் தங்க வியாபாரம், பண முதலீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதா? அது தொடர்பான ஆவணங்கள், தங்கம், பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் இன்று 3 -வது நாளாக விஜயகுமார், சுரேஷ் ஆகியோரின் கடை மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.




