முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலான் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளனர்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை-முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.