சென்னை: தினகரன் அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தங்களது முகாமுக்கு வந்ததில் எடப்பாடி தரப்பு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் என உற்சாகமாக இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.
தினகரனுக்கு எதிராக அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்துவிடும் முடிவில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.
தினகரன் அணியை உடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஒவ்வொரு விக்கெட்டாக விழப் போகிறது பாருங்கள் என்கின்றது எடப்பாடி தரப்பு. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.
https://www.youtube.com/watch?v=n9wDpCD1-ZM