தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இன்னும் விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்ட கருத்து மீண்டும் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய பரபரப்பான சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
1- பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளரின் அனுமதி தேவை
2- துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் என அனைவரும் தடம் புரண்டு பேசுகின்றனர்
3- நான் திமுகவுடன் கைகோர்க்கவில்லை
4- ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது
5- தேவைப்பட்டால் நீதி விசாரணையின் போது வீடியோவை தாக்கல் செய்வோம்
6- ஜெயலலிதா நைட்டி அணிந்து டிவி பார்க்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன
7- ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்.
8- ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ மட்டுமல்ல, இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார்.
9- தேர்தல் பரப்புரையில் சசிகலா படத்தைப் போடாததற்கு நான் காரணமல்ல, நிர்வாகிகளே காரணம்
10- முதலமைச்சர் தைரியமாக இருந்தால் பதவி விலகி மீண்டும் தேர்வாக நடவடிக்கை எடுக்கலாம்
11- துணை முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காகவே ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடியது வெளிச்சமாகிவிட்டது
12- ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் நீக்கியிருப்பார்களோ என தோன்றுகிறது
13- ஜெயலலிதா மரணம் குறித்து சில அமைச்சர்கள் புதிதாகப் பேசத் தொடங்கியுள்ளனர்;
பதவியை தக்க வைப்பதற்காக பேசுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
14- ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.