Tuesday , December 3 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 19.10.2017

இன்றைய ராசிபலன் 19.10.2017

மேஷம்: சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பேணுவது நல்லது. நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

ரிஷபம்: மனதில் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். நேர்மை மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்.

மிதுனம்: கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும்.லாபம் படிப்படியாக உயரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு உண்டாகும்.

கடகம்: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். உங்கள் நலன் விரும்புவரிடம் தகுந்த ஆலோசனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

சிம்மம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கன்னி: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். அளவான வருமானம் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும்.

துலாம்: பொறுமையுடன் செயல்பட்டு நன்மை காண்பீர்கள். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போவர். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் நீண்ட நாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவர்.

தனுசு: பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சீராக உயரும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகளால் உதவி உண்டு.

மகரம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். நீண்டநாள் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பர்களின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

மீனம்: உங்களின் வளர்ச்சி கண்டு அனைவரும் புகழ்ந்து பேசுவர். தொழில் வியாபாரத்தில் குளறுபடி உண்டாகி மறையும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …