Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் மீனவர் சரண் என்பவர் படுகாயம் அடைந்தார்.மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி ராமேசுவரம் பகுதி மீனவர்களுக்கு நேற்று இரவு தெரியவந்தது. அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் உயிர் தப்பி வந்த மீனவர் கிளிண்டன் என்பவர் கூறியதாவது:-

நாங்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து மீனவர் பிரிஜ்ஜோ இறந்துபோனார். மற்றொரு மீனவர் ஜெரோன் படுகாயம் அடைந்தார்.

நாங்கள் உயிருக்கு பயந்து கடலில் வீசப்பட்டு இருந்த வலைகளையும், பொருட்களையும் எடுக்காமல் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினோம். இலங்கை கடற்படையினர் வெறித்தனமாக எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …