ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரி ஒருவர் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கையகப்படுத்த முற்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிமுக பிரமுகர், தேர்தல் அதிகாரி என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை தனது மேல் அதிகாரியிடம் முறையிட்டு தன்னை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க போவதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.