Wednesday , February 5 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு பேரழிவுக்கு செல்லும்…

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு பேரழிவுக்கு செல்லும்…

நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் வரிசையில் கமல், ரஜினி சமீபகாலமாக அரசியலுக்கு வருவேன், வந்துவிடுவேன் என்று பேசி வருகின்றனர்.

Loading…


இதில் முதன் முதலில் நடிகர் கமல்ஹாசன் முந்திக்கொண்டு நற்பணி இயக்கம் சார்பாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தனது பிறந்த நாள் அன்று உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமின்றி ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கியும் அதனை வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக சாடியுள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது.

படத்தில் நடிப்பவர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில் நடிகர்கள் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல் தொடங்கப்போகும் கட்சியில் ஒருபோதும் சேரப்போவதில்லை.

நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்பதால் அரசியலுக்கு வரக்கூடாது. இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …