Tuesday , February 4 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Loading…


தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தன் புகைப்படத்தை கத்தியால் கிழிக்கும் சிறுவன் குறித்து பதிவிட்டிருப்பதாவது:

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்.

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும்.

அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …