Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!

டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!

டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிமுக அம்மா அணியில் 67 கட்சிப் பதவிகளுக்கு புதிதாக நியமனங்களை மேற்கொண்டார்.

இந்த நியமனம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும், அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் எதுவும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …