சென்னை: ஏற்கனவே மன வலியுடன் இருக்கும் எங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனிதாவின் அண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூலில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஒரு ஏழை மாணவி படிப்புக்கு உதவி கேட்டு, உதவ நினைத்தது தப்பா???
சிவசங்கர் எஸ்.எஸ் அண்ணன் மீதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு அண்ணன் மீதும் ஏன் இப்படி அவதூறு பரப்புகிறார்கள் தயவசெய்து மனவலிகளுடன் இருக்கும் எங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் #Mr.KRISHNASAMY என்று அந்தப் பதிவில் மணிரத்தினம் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y