Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தினகரன் பேனர்களை கிழித்து விருத்தாசலத்தில் போராட்டம்

தினகரன் பேனர்களை கிழித்து விருத்தாசலத்தில் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தினகரன் பேனரை கிழித்து, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ., உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி, எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அ.தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர். கடலுார் கிழக்கு மாவட்டச் செயலரான அமைச்சர் சம்பத்தை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, கலைச்செல்வனை, மாவட்டச் செயலராக, தினகரன் அறிவித்திருந்தார். இது, அதிருப்தியை அதிகரித்தது.

அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை கிழக்கு மாவட்டச் செயலர் ரமேஷ் தலைமையில், அக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், நேற்று பகல், 11:45 மணியளவில், கலைச்செல்வன், உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்; ஜெ.,க்கு துரோகம் செய்து விட்டதாக கண்டன கோஷமிட்டனர். மேலும், இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சசிகலா, தினகரன் ஆதரவு பேனர்களை கிழித்து எறிந்தனர்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …