இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது என்றார்.ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் வந்தால் தங்களுக்கு பாதகமாக அமையும் என …
Read More »நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது. துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புவி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு …
Read More »தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – யாழில் தெரிவித்தார் சந்திரிகா
“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு …
Read More »ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தந்திரோபாய நகர்வு தேவை! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்
“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையில் ஆயுத மோதல்களின் பாரம்பரியத்துக்குத் தீர்வைக் காண்பதற்காக இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல …
Read More »மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற …
Read More »எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா போரை சந்திக்கும் – ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்
முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் …
Read More »வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் – உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை …
Read More »நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம்
நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது. எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. …
Read More »சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி இயங்கும் சுரங்க ரெயில் சேவை தொடக்கம்
சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா ரெயில் சேவையில் சிறந்து விளங்குகிறது. புல்லட் ரெயில், சுரங்க ரெயில் சேவையில் அதிவிரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் …
Read More »நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய கல்வி அலகு
மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை வளர்பதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்காவில் புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கல்வி அழகினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த பாட அழகு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …
Read More »