தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. …
Read More »பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதி குருதேவ்சிங் பாதல் காலமானார்
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல் இன்று காலை காலமானார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரோன்மணி அகாலிதள கட்சியில் முத்த தலைவராக இருந்த 85 வயதான குருதேவ்சிங் பாதல் இதய நோய் காரணமாக இன்று காலை லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். குருதேவ்சிங் பாதல் இதற்கு முன்னர் பாஞ்க்ரைன் மற்றும் ஜைடொ ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மறைந்த பாதலுக்கு இரண்டு …
Read More »வட மாநிலத்தவர்களின் புத்தாண்டு உகாதி பண்டிகை – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து
வட மாநிலத்தவர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படும் உகாதி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வட மாநிலங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா …
Read More »மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைத்து செயற்கை நுண்ணறிவு புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்
மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் …
Read More »தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தியது
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி …
Read More »மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி
‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர …
Read More »யாழ். படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி நியமனம்
யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு படைகளின் தலைமையக தளபதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி இன்று முதல் யாழ். …
Read More »சவூதி அரேபியாவில் மலையகப் பெண் கொலை
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்துள்ளார். இவரின் உடல் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் அவர்களின் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இப்பெண் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது 41) மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரியவந்துள்ளது. இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது …
Read More »நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு புதிய அரசமைப்பில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சம்பந்தன்
புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் …
Read More »காங்கிரஸின் அபிவிருத்திக்கே மலையகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது : ஆறுமுகன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலத்தில் மலையகத்தில் கொண்டுவந்த அபிவிருத்திக்கே தற்போது அடிக்கல் நாட்டிவருவதாக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார். தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசிதான் 4, 000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு …
Read More »