அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், …
Read More »கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் 279 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இந்த காணிகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே காணிகளை …
Read More »மைத்திரி-ரணில் ஆட்சியில் தொடரும் சித்திரவதைகள் ஐ.நா மீள்பார்வைக்கு
ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்றினை ஐ.நா மனித உரிமை பேரவையின் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டிற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று சமர்ப்பித்துள்ளது. தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை …
Read More »ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 …
Read More »இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் ரூ.1500 கோடி சரக்குகள் தேக்கம்
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் …
Read More »உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் வீரவன்ச
சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
Read More »புலம்பெயர் தமிழரால் யாழ் இசைக்கருவிகள் அன்பளிப்பு
யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . யாழ் பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது. இந்த யாழ் இசைக்கருவிகள் யாழ். பொது நூலகத்திற்கும் மற்றொன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படும் யாழ் இசைக்கருவி தற்போதுவரை …
Read More »சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் இந்தப் பதவியேற்பு இடம்பெற்றது. சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக …
Read More »விமல் வீரவன்ச தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பிற்பகல் சிறைச்சாலை வைத்தியாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் உப்புல்தெனிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த 7 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். கடந்த 22 ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் …
Read More »தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை கோரவில்லை
வடக்கின் அடிப்படை வாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசாங்கம் கூறுவது போன்று உள்ளக விசாரணைக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றனர். சாதாரண பொது மக்கள் அவ்வாறு கூறவில்லை. இலங்கை …
Read More »