Thursday , November 14 2024
Home / முக்கிய செய்திகள் (page 440)

முக்கிய செய்திகள்

Head News

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான …

Read More »

உலகின் மிக வயதான ராணி லிசபெத்துக்கு 91 வயது

உலகின் மிக வயதான ராணி எலிசபெத்துக்கு 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த  கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இவரது முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. இவரது தந்தை மன்னர் 4ஆம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக முடி …

Read More »

பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி கூட்டமைப்பு – படையினர் இடையே பேச்சு இணக்கமின்றி முடிவு

பலாலி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடனான நேற்றைய கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தக் காணி தொடர்பில் உயர்மட்டப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர், அரச அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான முத்தரப்புச் சந்திப்பு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், பலாலி விமான நிலையம் மற்றும் அனைச் சுற்றியுள்ள …

Read More »

முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்

முள்ளிக்குளம் மக்களை நேரடியாக சந்தித்து போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவேன் என்று வடமாகாண ஆளுனர் உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று மாலை நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே …

Read More »

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு; எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் துரிதமாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு மூலமாவது தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசாங்கத்திடம் விடுதலை கோரும் தமிழ் …

Read More »

புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். …

Read More »

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் உடனடியாக 60 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணிப்பு

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் சலுகை அளிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற முன்னேற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முழுமையாக பாதிக்கப்பட்ட 60 வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும் அவற்றை கொண்டு செல்வதற்காக 10, 000 …

Read More »

மோடி இலங்கை வருவதை உறுதிப்படுத்தினார் மைத்திரி!

மே மாதம் நடைபெறவுள்ள வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடியும், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மற்றும் சில விடயங்கள் வருமாறு:- * குருநாகல், அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவியுடன் …

Read More »

இப்படியே சென்றால் இராணுவப் புரட்சிதான்! – அரசுக்கு டியூ எச்சரிக்கை

இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. …

Read More »

பிரான்ஸ் தாக்குதலில் போலீசார் ஒருவர் மரணம்.

சற்றுமுன் பிரான்சில் சேம்ப்ஸ் எலிஸஸ்ல் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் மரணம்அடைந்ததுடன் மற்றுமொரு போலீசார் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு நடத்திய தாக்குதலாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடந்த நகரை முழுமையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் நடந்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய உங்கள் தமிழருவியின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

Read More »