Saturday , November 16 2024
Home / முக்கிய செய்திகள் (page 439)

முக்கிய செய்திகள்

Head News

ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை!

ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆஸ்திரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை வந்த வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை …

Read More »

இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்

டெல்லியில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை ஒத்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசியதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற …

Read More »

மீத்தொட்டமுல்ல அனர்த்தம் ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஆவைளரவயமந ரேஅயாயவய அவர்கள் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் …

Read More »

போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி

கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய இராணுவத்தின் 58ஆவது …

Read More »

ஜனாதிபதியாகும் கனவு பஸிலுக்கு இல்லை என்கிறது மஹிந்த அணி!

“ஜனாதிபதியாகும் கனவில் பஸில் ராஜபக்ஷ இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் பஸில் உடனே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.” – இவ்வாறு மஹிந்த அணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எமது அணியின் சார்பில் பஸில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை. …

Read More »

படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே வேண்டும்! – கதறி அழுகின்றனர் உறவுகள்

“எமது பிள்ளைகள் உயிரோடு உள்ளதாக இராணுவப் புலானாய்வாளர்கள் தெரியப்படுத்தியபோதும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது பிள்ளைகள் விடுவிக்கப்படவில்லை. படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே எமக்கு வேண்டும்.” – இவ்வாறு கதறி அழுகின்றனர் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளே இவ்வாறு கதறி அழுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் …

Read More »

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். …

Read More »

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் …

Read More »

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை …

Read More »

இறக்காமம் – மாயக்கல்லி பகுதிக்கு நுழைய இடைக்காலத் தடை : அம்பாறை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 3 தினங்களாக இறக்காமம் – மாயக்கல்லி பகுதியில் இடம்பெற்று வரும் இனமுறுகலை அடுத்து இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு மே மாதம் 17ஆம் திகதி வரை அம்பாறை மேலதிக மாவட்ட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி மாயல்கல்லி மலையடிவாரத்தில் பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமான வேளையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினருக்கும் இறக்காமம் பிரதேச மக்களுக்கும் இடையில் …

Read More »