Friday , November 15 2024
Home / முக்கிய செய்திகள் (page 438)

முக்கிய செய்திகள்

Head News

ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இழந்த இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் …

Read More »

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு …

Read More »

பூரண ஹார்த்தாலால் இன்று முடங்கியது தமிழர் தாயகம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கிலும், கிழக்கிலும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? – வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கின்றது பேராதரவு!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற …

Read More »

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி

சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவியை பீல்ட் மார்ஷல் சரத் …

Read More »

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் – டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் …

Read More »

மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகியது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.   அத்துடன், இந்திய, சிறிலங்கா பிரதமர்களின் முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூம், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக …

Read More »

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் …

Read More »

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க …

Read More »

திருமலை எண்ணெய் கிணறுகள்;பேச்சுவார்த்தையின் பின்னரே முடிவு எடுக்கப்படும்

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கும், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகள் விற்பனை விவகாரத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. …

Read More »