Wednesday , November 20 2024
Home / முக்கிய செய்திகள் (page 436)

முக்கிய செய்திகள்

Head News

பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் …

Read More »

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மக்களுக்கு வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான …

Read More »

தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசின் அதரடி நடவடிக்கை

தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இருக்க விசேட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், பிரதமருக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்திய சேவைகளும், …

Read More »

சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்

“படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது. – இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இறுதிப் போரில் …

Read More »

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் சந்திம

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லையெனவும், இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையெனவும் …

Read More »

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறாது எனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இவ்வேலை நிறுத்தம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து …

Read More »

131 விகாரைகள் வடக்கில்; 61 விகாரைகள் மட்டுமே பதிவு

வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய 131 விகாரைகள் இருந்தபோதிலும் அவற்றுள் 61 விகாரைகள் மாத்திரமே பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய விகாரைகள் …

Read More »

சுமணன் படுகொலை விவகாரம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி எம்.இளஞ்செழியன் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்தோடு, ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இளங்செழியன், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா. கண்டுகொள்வதில்லை: சி.வி. விசனம்

“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. …

Read More »

இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்

“ஊடக சுதந்திரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘”இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தி அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் …

Read More »