Tuesday , December 3 2024
Home / முக்கிய செய்திகள் (page 432)

முக்கிய செய்திகள்

Head News

பேரனர்த்தம்: 194 சடலங்கள் இதுவரை மீட்பு! 99 பேரைக் காணவில்லை!!

இலங்கையில் கடந்த வாரம் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் …

Read More »

தொடர்கின்றது பேரவலம்! – பலியானோர் எண்ணிக்கை 177 ஆக உயர்வு; 109 பேர் மாயம்

இலங்கையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றும், 109 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 ஆயிரத்து 612 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 928 பேர் 366 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் …

Read More »

இயற்கைப் பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு! 111 பேர் மாயம்!! 2,035 வீடுகள் சேதம்!!! – தொடர்கிறது மீட்புப்பணி

நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில், 111 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களில் 95 பேர் காயமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 735 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 218 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். …

Read More »

இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 100 பேர் பலி; .101 பேர் மாயம்!

* ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்* மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; மீட்புப் பணியும் தொடர்கிறது * பாடசாலைகளுக்கு விடுமுறை; அரச ஊழியரின் விடுமுறை இரத்து * ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; பல இடங்களில் வெள்ளம் * அவசர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு அடைமழையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் …

Read More »

ரவிக்கு முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள!

புதிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மந்த கதியில்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியுடனான சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்–லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணாமல் போனோர் குறித்த அலுவலத்தை நிறுவுதல் உள்ளிட்ட நேரடி செயற்பாடுகளைக்கூட இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறியுள்ளதென டுங்–லாய் மார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய …

Read More »

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் …

Read More »

இனவாதம் உருவாக இடமளிக்கமாட்டோம்: மங்கள சமரவீர

வடக்கு, கிழக்கில் எந்த வடிவத்திலும் அடிப்படைவாதம் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. இதில் வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் இல்லை. அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் …

Read More »

வடக்கில் ஏன் புலிக்கொடியை ஏற்றமுடியாது? – சிறிதரன் கேள்வி

தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிதி அமைச்சின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு …

Read More »

முன்னாள் நிதியமைச்சரை பாராட்டும் புதிய நிதியமைச்சர்

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்தாலும் ரவி கருணாநாயக்கவின் கடின உழைப்பினால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ள அனைத்துச் சவால்களையும் எதிர்நோக்க …

Read More »