வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த …
Read More »செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.
எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் …
Read More »வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் உடன் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் …
Read More »5 தமிழர்களைக் கொன்ற பொலிஸார் இருவருக்கு மரணதண்டனை! – இருபது வருடங்களுக்குப் பின் தீர்ப்பு
அம்பாறையில் 5 தமிழர்களை சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும் அம்பாறை மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சுமுது பிரேமச்சந்திர மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கான்ஸ்டபிள்களான ஆர்.பி.காமினி குமாரசிங்க மற்றும் ஜே.எம்.நிமல் குணரத்ன ஆகிய இருவருக்குமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபரான ஏ.டபிள்யூ.வசந்தகுமார எனும் கான்ஸ்டபிள் வழக்கு விசாரணை நடைபெற்ற …
Read More »லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான …
Read More »தீவிரவாதத் தாக்குதல்களால் பீதியில் உறைந்தது லண்டன்! 7 பேர் பலி; 48 பேர் படுகாயம்!!
தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொலை நகரமெங்கும் உச்சக்கட்டப் பாதுகாப்பு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் நேற்றுமுன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர் தீவிரவாதத் தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாத காலப்பகுதியில் பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பதுடன் பொதுத்தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் …
Read More »தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!
தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்! – சந்திரிகா அம்மையார் கூறுகின்றார்
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் யாவரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு …
Read More »மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை!
மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை! – அரசிடம் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம்கள் மீதான மத – இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும் – பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என்று, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்தார். தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிர்சர்லாந்து தூதரகப் …
Read More »ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியம் தீயுடன் சங்கமமாகி 36 ஆண்டுகள்!
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ். பொதுநூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணப் பொதுநூலகம் சிங்கள வன்முறைக் கும்பல்களினால் மூட்டப்பட்ட செந்தணலில் பொசுங்கி நீறாகிப்போனது. இந்தச் துயரச் சம்பவத்தைத் தாங்கமுடியாது யாழ்ப்பாண சம்பத்திரிசியார் கல்லூரி மாடியில் இருந்து அவதானித்த நடமாடும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட்ட பன்மொழிப் புலவர் வண.தாவீது அடிகளார் …
Read More »