“நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.” – இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது அமர்வு ஜெனிவாவில் …
Read More »முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஹக்கீம் தெரிவிப்பு
“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.” – இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்ததாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியாக அந்த ஆட்சி இருக்கவில்லை …
Read More »இனவாதம் ஊடாக் சமஷ்டியை நிறுவ நல்லாட்சி முயற்சியாம்! – விமலின் கண்டுபிடிப்பு இது
“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செய்ற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை வெறுமனே ஓர் இனவாதச் செயற்பாடாகப் பார்க்கமுடியாது. இதன்பின்னால் பெரும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருக்கின்றது. …
Read More »மைத்திரி மீது மஹிந்த அணி கடுகளவேனும் விசுவாசமில்லை! – நாமல் கூறுகின்றார்
“நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டே தவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்த அணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணையமுடியாமல் உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது எம்மை அமைப்பாளர் பதவியிலிருந்து …
Read More »இன, மத கலவரக்காரர்களை அடக்க விசேட அதிரடிப் படை களமிறக்கம்!
இலங்கையில் இன, மத கலவரங்களைத் தூண்டுபவர்களையும், அக்கலவரங்களை நடத்துபவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. “நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது விசேட அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது” என்று பொலிஸ் …
Read More »இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட ஜனாதிபதி உத்தரவு
இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை பிறப்பித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் மற்றும் …
Read More »போர்க்குற்ற விசாரணையை ஏற்கமறுத்தே ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை கைவிட்டோம்! – தனது ஆட்சியை நியாயப்படுத்தி மஹிந்த அறிக்கை
“படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிட்டது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய …
Read More »ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்
நாட்டில் இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவிட்டி குழப்பங்களை உருவாக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்குரிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் …
Read More »தேர்தலைத் தள்ளிப்போட ஞானசார தேரரைப் பயன்படுத்துகின்றது அரசு! – மஹிந்த அணி குற்றச்சாட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்காக அரசு ஞானசார தேரரின் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிருப்பிக்கொண்டிருப்பதாக மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இந்த அரசு ஏற்கனவே பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி வந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரின் விவகாரத்தைப் பூதாகரமாக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் …
Read More »ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!
ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் …
Read More »