Tuesday , December 3 2024
Home / முக்கிய செய்திகள் (page 429)

முக்கிய செய்திகள்

Head News

புகையிரத ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் ஊதிய கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்காமையை கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை குறித்து அண்மையில் பேச்சுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் அரசு உறுதிமொழி எதனையும் வழங்கியிராத சூழலிலேயே நாளை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Read More »

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில்

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More »

வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது

முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்

Read More »

வடக்கு மாகாண சபை முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு: சம்பந்தன்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, …

Read More »

மஹிந்த பாகிஸ்தான் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read More »

முதல்வருக்கு ஆதரவாக குடா நாட்டில் ஹர்த்தால்

வட. மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வட. மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்கள் தவிர்ந்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வட. மாகாணத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வெளிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சருக்கு எதிராக …

Read More »

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று குடா நாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி முதலமைச்சரின் இல்லத்தை அடைந்த போது பேரணி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்தின் …

Read More »

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.க்கு அறிவுறுத்தல்

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள …

Read More »

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு …

Read More »