புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசின் முயற்சி ஊடாக இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கை தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் இந்தியா …
Read More »தமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும்! – கனேடியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்கவேண்டும். இதற்கு கனேடிய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள …
Read More »காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!
காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
Read More »வித்தியா படுகொலை வழக்கு: சி.ஐ.டியின் விசாரணைக்கு சமுகமளிக்காத விஜயகலா!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டபோதும், அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது. பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், வடக்கு மாகாணத்தின் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் …
Read More »கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை தவிர்த்த சித்தார்த்தன் எம்.பி.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுமார் 45 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான நியமன ஆசன விவகாரத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் …
Read More »ரணிலும் ரவியும் உடன் பதவி விலகவேண்டும்! – நாமல் வலியுறுத்து
“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான …
Read More »திங்களன்று விஜயகலாவை அழைத்துள்ள இரகசிய பொலிஸ்
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை 28ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி …
Read More »ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக ரவிராஜின் பாரியாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று …
Read More »புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக கருதி, இதற்கெதிராக செயற்படுமென தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அப்போது தமிழ் மக்கள் அனைவரும் …
Read More »விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கிவைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
Read More »