“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்கமுடியாது. ஆகவே, கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. …
Read More »ரணிலை வெற்றிபெற வைக்க ஐ.தே.க. அமைப்பாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா பணம்! – மஹிந்த அணி தெரிவிப்பு
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணம் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்டது என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பிரதமரின் திருட்டைத் தேடுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ள அதிசயமொன்று இந்த …
Read More »உலக தமிழராய்ச்சி மாநாட்டு யாழ்ப்பாணத்தில்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இதன்படி …
Read More »வடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 30ஆம் நாள் கிளிநொச்சி படைகளின் …
Read More »யாழ். வாள்வெட்டுச் சம்பவங்கள்: முன்னாள் போராளிகளை குறிவைக்கின்றது அரசு!
இறுதிப்போரின்போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு உரியவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஆராயவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலிருந்து படைமுகாம்கள் அகற்றப்படக்கூடாது எனவும் இடித்துரைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் பொலிஸார்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளது. …
Read More »இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்
“இலங்கையின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனைசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக …
Read More »பிணைமுறி மோசடியாளர்களுக்கு உடன் தண்டனை வழங்கவேண்டும்! – சு.கவின் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம்
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலர் பின்புலமாக இருந்ததாகத் தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர் எனத் தெரியவருகின்றது. பிணைமுறி மோசடி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பின்புலமாக இருந்துள்ளனர் என்று குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்துவரும் …
Read More »மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் …
Read More »ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு …
Read More »அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியின்போது அது மீளப்பெறப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை முறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளானது நாட்டுக்கு துக்கதினமாகும். குறித்த உடன்படிக்கை …
Read More »