தமிழர்கள் ஆகிய நாம் அநீதியாக எதையும் கேட்காது நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் …
Read More »மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலைமையினை நல்லாட்சியே உருவாக்கியது: ரணில்
கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்போது மக்கள் சுதந்திரமாக செயல்படும் நிலையை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹற்றன் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு நாடாளுமன்ற நிறைவையொட்டி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றினணந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை …
Read More »மேற்குலகின் தேவைப்பாடு சமஷ்டியே! – தனிநாட்டைக் கொடுக்கவே புதிய அரசமைப்பு என்கிறார் விமல்
“நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச் சபையிலிருந்து எமது கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் விலகிவிட்டோம். அதேபோல் வழிநடத்தல் குழுவிலும் நாம் உறுப்பினர்களாக இல்லை. உப குழுக்களிலும் எமது உறுப்பினர்கள் …
Read More »கோட்டாவை கைதுசெய்து வீண் பாவம் தேடாதீர்கள்! – அரசிடம் கோருகிறது மஹிந்த தரப்பு
புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்த அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டாபய. அவர் புலிகளைத் தோற்கடித்தமைதான் இதற்குக் காரணம். இவரை …
Read More »ஞாபகமறதி நோய் குணமாகும்வரை ரவியை வெளிநாடு செல்லவிடாதீர்! – ஜனாதிபதியிடம் கம்மன்பில வேண்டுகோள்
தனக்கு எதுவுமே ஞாபகமில்லை என சகட்டுமேனிக்கு சாதித்துவரும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்பட்டிருக்கும் ‘டிமென்ஷியா’ எனும் ஞாபகமறதி நோய் குணமாகும்வரை அவரை வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்கோ அல்லது ஏனைய விவகாரங்களுக்கோ அனுப்பவேண்டாம் என்று புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள மேலதிக விவரங்கள் வருமாறு:- “அர்ஜுன் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்க ரோஹித்த தயார்!
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 156 நாட்களை கடந்துள்ளது. எனினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையில், இன்றைய தினம் கிழக்கு …
Read More »வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் …
Read More »படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்காக 8ஆம் திகதி வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள்!
இலங்கை சிறைச்சாலைகளில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்குரிய ஏற்பாடுகளை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு செய்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “அரசியல் கைதிகளான நிமலருபன், டில்ருக்ஷன் ஆகிய இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளானவாறு 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். இவர்களுடைய 5ஆம் ஆண்டு நினைவேந்தலும், இதுவரை கொல்லப்பட்ட …
Read More »மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி! -கூட்டமைப்பு குற்றச்சாட்டு
“தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுடன் நாம் தொடர்ந்து பேசிவருகின்றோம். இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்முதல் அரசியல் பிரச்சினைகள்வரை அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், …
Read More »ஆணைக்குழுவுக்கு ரவி தரும் விளக்கங்களின் பின்னரே அவர் பற்றிய முடிவை எடுக்கும் ஐ.தே.க.!
பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்களின் அடிப்படையிலேயே அவர் பற்றிய முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்குமென அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்பே இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. …
Read More »