சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை நீதித்துறைமுன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன
Read More »குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, “வடக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரக்கோரி, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் …
Read More »ஆவா குழுவின் முன்னணி தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோட்டம் – சிறிலங்கா காவல்துறை
யாழ்.குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோடத் தொடங்கியுள்ளனர். சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆவா குழுவில் முன்னணியில் இருந்து செயற்பட்ட பலரும், யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள கைதுகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளால், தெற்கிலுள்ள மாகாணங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். …
Read More »மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புக்கு தேர்தல் ஆணையகத் தலைவரும் கடும் ஆட்சேபம்!
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு:- “நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்கு உள்ளது. எனினும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக ஓரிரு சட்டமூலங்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணைக்கு …
Read More »வடக்கு அமைச்சர் நியமனத்தில் புவிசார் அரசியல் தலையீடு!
வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளது என அறியமுடிகின்றது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப்பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகின்றது. தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப்பினர் இருக்கின்றார் எனச் சந்தேகிப்பதன் காரணத்தாலேயே …
Read More »வடக்கின் அமைச்சுக்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம்!
வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் 3 முக்கிமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்திப்புக்கள் தொடரும் எனவும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விரைவில் சந்தித்துப் போசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் …
Read More »எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி: சிறிதரன்
வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் …
Read More »வடக்கு இளைஞர்களின் செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன: விக்னேஸ்வரன்
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே பிரதான காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் …
Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும்: கருணாகரம்
அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழாவில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தின் 5 வருட …
Read More »சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு
‘சமஷ்டி’ கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் தீர்ப்பு வழங்கியுள்ளார். “இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்கும் கொள்கையுடன் செயற்படவில்லை” என்றும் தனது தீர்ப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு மற்றும் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அந்தக் …
Read More »