Friday , November 22 2024
Home / முக்கிய செய்திகள் (page 110)

முக்கிய செய்திகள்

Head News

வவுனியா முஸ்லிம் பகுதிகள் சுற்றிவளைப்பு

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரர்ணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து …

Read More »

சம்பந்தனா புலிகளைப்பற்றி இப்படி கூறுவது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் …

Read More »

தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 76 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது …

Read More »

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்!

இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இலங்கைக்குள் ஊடுருவிய 2 ஐ.எஸ் தீவிரவாதிகள்?

ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இரண்டு பேர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா, ஈரானில் பயிற்சி பெற்ற இவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Read More »

இன்றைய ராசிபலன் 25.04.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். …

Read More »

புலிகளின் போர்முறையை விட இது வித்தியாசமானது!

Ranil

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நிலவிய சிக்கல் தொடர்பில் அதிகாரிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். தற்போது தீவிரவாதிகளை கைது செய்யவும், தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவரை இலங்கையர்களுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றுடன் தொடர்பினை வைத்துள்ளது. இந்த …

Read More »

இலங்கையில் 160 தற்கொலை குண்டுதாரிகள் பதுங்கியுள்ளனர்??

இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்றுக் கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்புப் பேரவைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீவிரவாத பயிற்சி பெற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதிகளை கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு, காவல்துறை திணைக்களம் …

Read More »

வவுனியா வைத்தியசாலையில் தீவிரமாகும் ராணுவத்தினரின் சோதனை!

வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள், தலை கவசங்கள் …

Read More »

நுவரெலியாவில் பரபரப்பு! தீவிரவாதிகள் பலர் கைது…

கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாக பலர் மலையகப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் …

Read More »