இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று ஒன்பதாவது நபர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???
மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ??? தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு! ஜூன் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலை, திட்டமிட்டபடி நடத்துவதற்கான சூழல்கள் இல்லையென, இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலைமைகள் சீரான பிறகே தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் …
Read More »9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. …
Read More »நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் நேற்று (28) மட்டும் 31 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன், 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என்றும், நால்வர் இராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 222 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் …
Read More »நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென குறித்த …
Read More »36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!
36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 36 ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி
இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த வீரர் தங்கியிருந்த …
Read More »இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு நாட்டில் இன்று (24.04.2020) மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை 373 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 259 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 107 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை …
Read More »