ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீ சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு, குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளர் – திரு. தர்மசிறி தசநாயக்க பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் – திரு. அதுல விஜேசிங்ஹ குருணாகல் மாவட்ட அமைப்பாளர் – திரு. சம்பத் சுசந்த கெடவலகெதர …
Read More »அமெரிக்காவிலிருந்து சிறிசேனவிற்கு வந்த அவசர கடிதம்.!
இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில …
Read More »ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என தனியார் ஊடகம் ஒன்று தகவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜன பெரமுனவின் …
Read More »மஹிந்தவிடம் கெட்டவார்த்தைகளில் திட்டு வாங்கிய முக்கியஸ்தர்?
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் முக்கிய பிரபலம் ஒருவரை கெட்ட வார்த்தைகளினால் கடுமையாக திட்டியுள்ளதாக தெற்கு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்டீன் சாபீ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் தொடர்புபடுத்தி தம்மை நெருக்கடிக்குள் சிக்க வைத்ததாக மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரை தூற்றியுள்ளார். அண்மையில் மஹிந்த ராஜபக்சவை, ரதன தேரர் சந்தித்த போது இவ்வாறு கடுமையான தூற்றியுள்ளார். …
Read More »ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த நிலையில், அந்த பிரேரணையில் கையொப்பமிட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். குற்றப் பிரேரணைக்கு இதுவரையில் 10 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் அரசியல் நெருக்கடி நிலைமைய தோற்றுவித்து நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கியமை, ஏப்ரல் …
Read More »க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்
க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர். அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதாகும். அத்துடன், 2678 பரீட்சை மத்திய …
Read More »தள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்!
மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை சந்தியில் முதுமையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டி தனது நாளாந்த கடமைகளை செய்யும் வீரத்தமிழ்த்தாய் ஒருவர் வாழ்ந்துவருகின்றார். வாழ்வில் முதுமை என்பது ஒரு தடையல்ல என உணர்த்துகின்றார் அந்த வீர வயோதிப தமிழ்த்தாய். தானே தனது கடமைகளை துவிச்சக்கர வண்டி ஓடி சாதிக்கின்றார். பொதுவாகவே வயோதிபம் தொடங்கினாலே நோய் எனும் உளநிலையை ஏற்படுத்தி மனம் பலவீனப்பட்டு மற்றவரின் ஆதரவை நாடி தங்கிவாழ்வது சாதரணமானவர்களின் மனநிலை. ஆனால் இத்தாயின் …
Read More »தனது குறைபாட்டை கூறிய ரணில்
தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது தனது பெரும் குறைபாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளைப் பேசும் திறமை முக்கியமானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பேச முடியாமல் போவதால் யுத்த சூழ்நிலைக்கும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விசேட சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பிரதமர் தலைமையில் சான்றிதழ்கள் …
Read More »சம்மாந்துறையில் தீவிரவாதிகள்!
அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் …
Read More »மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா!
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழுவில் தாம் முன்னிலையாகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியும் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் வெளிப்படுத்துமாறு ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழு முன்னிலையில் தாக்குதலைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்றும் , பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது …
Read More »