ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அந்தவகையில், 1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச …
Read More »ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு!
ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு! ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாகரிகமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் மத்துகமவில் நடந்த நிகழ்வில் ஹேஷா விதானகே உரையாற்றிய போது, சஜித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணிய வேண்டி வருவமென கூறியிருந்தார். இதனால் கோத்தபாய உச்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே இன்று கட்சி …
Read More »ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு …
Read More »சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா
சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியால் தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக அறிந்ததாகவும் எனினும் அந்த நிபந்தனைகளுக்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய சஜித்துக்கு ஆதரவளிப்பதாகவும் சரியான வெற்றி கிடைப்பது தொடர்பில் …
Read More »நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்
நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபப்ட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்திருந்தனர். கடந்த 16 ஆம் திகதி மக்கு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட …
Read More »கொழும்பில் பிரமாண்ட போராட்டம்
கொழும்பில் பிரமாண்ட போராட்டம் இலங்கை அதிபர், ஆசிர்களின் 30 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது, அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்ண்டெக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், லோட்டஸ் வீதி மூடப்பட்டது. அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த தயாராக …
Read More »கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!
கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் …
Read More »முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!
முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து …
Read More »நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினர் குவிப்பு! மைத்திரி அதிரடி
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினர் குவிப்பு! மைத்திரி அதிரடி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமையவே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வர்தமானிக்கு அமைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள …
Read More »திருகோணமலையில் கோரவிபத்து- 18 போ் படுகாயம்…
திருகோணமலையில் கோரவிபத்து- 18 போ் படுகாயம்… திருகோணமலை- கித்துள் ஊற்று பகுதியில் நேற்று இரவு வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் படுகாயமடைந்துள்ளனா். இந்த நிலையில் விபத்திற்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் மூன்று சிறுவர்கள் அதிதீவிர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. மரண சடங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று விட்டு மீண்டும் …
Read More »