காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: நா.வேதநாயகன் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் …
Read More »வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு : சீ.வி.கே.சிவஞானம்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு : சீ.வி.கே.சிவஞானம் வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார் வடமாகாண நீர் தேவைகள், குடிநீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவை தலைவர் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை தாம் தாம் சந்தித்து …
Read More »சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி
சாவகச்சேரியில் விபத்து : வயோதிபர் பலி யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ-9 வீதி கல்லடிச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த 82 வயதுடைய இளையதம்பி ஆறுமுகம் என்ற முதியவரே …
Read More »தெரனியகலயில் ஏழு வயது சிறுமி உட்பட இருவர் வெட்டிக் கொலை
தெரனியகலயில் ஏழு வயது சிறுமி உட்பட இருவர் வெட்டிக் கொலை தெரனியகல, மாகல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உட்பட இரண்டு பேர் இனந்தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின் போது படுகாயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் …
Read More »244 பேருக்கு கிளிநொச்சியில் பன்றிக் காய்ச்சல்
244 பேருக்கு கிளிநொச்சியில் பன்றிக் காய்ச்சல் கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து …
Read More »சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு
சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை மீதான விசாரணை பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகள் நீக்கப்படின் அது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு …
Read More »காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம்
காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம் குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த குறித்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. பன்னங்கண்டி பகுதியில் 3 பிரிவுகளாக வசித்துவரும் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, …
Read More »ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார்
ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார் சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது …
Read More »தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன்
தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் …
Read More »இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி
இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, …
Read More »